சென்னை
6 பேருக்கு காவல்
சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கேட்டு கடை ஊழியர்கள் மீதான தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுதில்லி
ஒரு வாரம் கெடு
காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கில் கர்நாடக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. கழிவுநீர் கலப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே 2 முறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

புதுதில்லி
புகார்கள் யூகமாம்!
சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்கான நிலம் சட்டத்துக்குட்பட்டே கையகப்படுத்தப்படுகிறது என்றும் விதிகளை மீறி திட்டம் செயல்படுத்தப்படுகிறது எனக் கூறுவது யூகமே; யூகத்தின் அடிப்படையில் வழக்குகள் தொடர முடியாது என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு வாதிட்டுள்ளது.

கோவை
பாஸ்கர் கைது
சுகப்பிரசவம் பயிற்சியளிப்பதாக கூறியவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் சுகப்பிரசவம் பார்க்க பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்த கோவை நிஷ்டை மைய உரிமையாளர் ஹீலர் பாஸ்கர் என்பவரை மோசடிப் புகாரில் குனியமுத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை
பெண் ஊழியர் சஸ்பெண்ட்
திருச்சி ராஜா காலனியைச் சேர்ந்தவர் ஆர்.பூபதிகண்ணன்(48). இவர் புதுக்
கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 28-ம் தேதி மாத்தூர் அருகே காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இதுதொடர்பான வழக்கில், அவருடன் தட்டச்சராக பணிபுரிந்த சவுந்தர்யாவைக் கைது செய்து காவல்துறையினர் கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருப்பரங்குன்றம்
காலியாக உள்ளது
மாநில தலைமை தேர்தல் அதிகாரி அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வெள்ளியன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர், திருப்பரங்குன்றம் தொகுதி காலியாகவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் இடைதேர்தல் நடத்த சொன் னால், உடனடியாக அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

நாகப்பட்டினம்
கடைமடையில் ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு விழாவை தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வரும் நிலை
யில், காவிரி கடலுடன் சங்கமிக்கும் இடமான காவிரிபூம்பட்டினத்தில் பெண்கள் காவிரித் தாய்க்கு படையலிட்டு வணங்கினர். தங்களின் வாழ்வாதாரமாக உள்ள விவசாயத்திற்கு முக்
கியமான காவிரி நீருக்கு நன்றி செலுத்தும் விதமாக இதனை கொண்டாடினர்.

அமராவதி
ஆந்திர அரசின் புது அறிவிப்பு                                                                                                                      ஆந்திராவில் வேலை வாய்ப்பு இல்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு உதவும்வகை யில், மாதம்தோறும் ரூ.1,000 நிதி உதவி அளிக்க அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. முதல்வர் சந்திரபாபு தலைமையில் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், 12 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

சென்னை
‘பெரிய நெட்வொர்க்’
‘தேர்வுதாள் மறுக்கூட்டல் முறை கேடு விவகாரத்தில் எத்தனைப் பேராசிரியர்
களுக்கு தொடர்பு உள்ளது என முழுமை யாகத் தெரியவில்லை. ஆனால் இதன் பின் பெரிய நெட்வொர்க் இருப்பதாக நான் கருதுகிறேன்’ என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.