சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி ‘என் நிலம் என் உரிமை’ என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பிரச்சாரப் பயணத்தின் துவக்க நிகழ்ச்சி திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 1 புதனன்று காலை எழுச்சியுடன் நடைபெற்றது.

பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு விடுவித்தவுடன், தலைவர்களும் அனைத்து தோழர்களும் மீண்டும் நடைபயணத்தை மேற்கொண்டனர். சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சென்றனர். அதற்குள் காவல்துறையினர் மீண்டும் அவர்களை கைது செய்து அதே திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். கட்சியின் மாநிலச் செயலாளர்கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழுஉறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற் குழு உறுப்பினர் க.கனகராஜ், ஆகியோர் தலைமையில் 13 பெண்கள் உள்பட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை இரண்டாவது நாளாக வியாழனன்றும் திருமண மண்டபத்திலேயே சிறைவைத்த காவல்துறையினர், தலைவருடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடைதினர் . ஒவ்வொரு முறையும் நடைபயணத்தை கைவிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். ஆனால், அதற்கு உடன் படாத மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள், “ நீங்கள் எத்தனை முறை கைது செய்து விடுதலை செய்தாலும் சேலத்தை நோக்கிய எங்கள் நடைபயணத்தை நிறுத்தமாட்டோம்” என்று உறுதிபடத் தெரிவித்தனர். இதனால் காவல் துறையினர் திக்குமுக்காடினர்.

எட்டு வழிச்சாலை

இரண்டாவது நாளாக இரவு 10 மணிக்கு மேல் நீதிபதி முன்பு உங்களை ஒப்படைக்க போகிறோம் என 90 பபேரை காவல்துறையினர் நீதிபதி வீட்டிற்கு வாகனங்களில் அழைத்து சென்றனர். பின்னர்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலசெயற்குழு உறுப்பினர் கனகராஜ் உட்பட முதல் 10 பேர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு ஆதரவாக நமது வழக்கறிகள் குழுவும் நீதிபதி வீட்டிற்கு சென்றனர்.

 

 

 

 

 

 

 

 

முதலில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுச் சொத்துக்களுக்கு சேதாரம் விளைவித்தற்காக கைது செய்தாக கூறி 90 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் நீதிபதி முன்பு குற்றம்சாட்டப்பட்ட அளித்தனர் அளித்துள்ளனர்.

பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் சார்பில் 15 வழக்கறிஞர்கள் காவல்துறையினர் தொடுத்த வழக்கு முற்றிலும் தவறானது, நிச்சியமாக சட்டவிரோதமானது . இந்த வழக்கு பதிவு செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எந்த வித முகாந்திரமும் இல்லாமல் வழக்கு பதிவு செய்யப்படுகிறபோது சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டர்களை நீங்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கக்கூடாது என்று வழக்கறிஞர்கள் நீதிபதியின் முன்பு வாதிட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை கேட்ட போது, நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எந்த தடையும் காவல்துறை எங்களுக்கு விதிக்கவில்லை, அப்படி இருக்கும் பட்சத்தில் நாங்கள் தடையை மீறியது என்ற வழக்கே முறையானது அல்ல. இது தவறானது என்று கூறினார்.

நீங்கள் ஜாமினில் போக விரும்புறீர்களா என நீதிபதி கேட்டார்; நாங்கள் ஜாமினில் போக விரும்பவில்லை. ஜாமீன் மனுவையும் நாங்கள் தாக்கல் செய்யவில்லை எங்களை பொருத்தமட்டில் “ஒன்று நடைபயணத்தை தொடர்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். அனுமதி இல்லையெனில் நாங்கள் சிறைச்சாலை செல்ல தயாராக இருக்கின்றோம்” . அதுமட்டுமல்லாமல் இந்த தவறான வழக்கில் சிறையில் எங்களை அடைப்பதைப்பற்றியும் நீங்கள் சிந்தித்து பார்க்கவேண்டும் என்று கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

கடைசியாக நீங்கள் ஜாமீன் தாக்கல் செய்தால் நான் சொந்த ஜாமீனில் விடுவிப்பதாக நீதிபதி சொன்னார். கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் நாங்கள் ஜாமீன் மனுவை அளிப்பதற்கு தாயார் இல்லை. நாங்கள் நடைபயணத்தை நடத்துவதற்கு அனுமதி வேண்டுமே தவிர, தவறான வழக்கில் எங்களை அடைத்துவைத்துக் கொண்டு அதற்கும் நாங்களே ஜாமீனில் கொடுத்து விடுதலையாவது நாங்கள் விரும்பவில்லை, அதற்காக எங்கள் போராட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

பிறகு காவல்துறை அதிகாரிகளுடனும், வழக்கறிஞர்களுடன் கலந்து பேசிய பிறகு நீதிபதி குற்றம்சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைப்பதற்கான முகாந்திரம் இல்லை என கூறு விடுக்கின்றேன் என்று விடுதலை செய்தார். முன்னதாக விசாரணையின் போது காவல்துறையின் முறையற்ற நடவெடிக்கையை கண்டித்தாதோடு அறிவுரையும் வழங்கினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.