சென்னை;
தமிழகத்தில் முதல்முறையாக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு மையம் வெள்ளியன்று திறக்கப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையமும், தமிழக காவல்துறையும் இணைந்து செயல்படுத்தும் இந்த மையத்தை சென்னை மாநகர காவல் ஆணை யர் ஏ. கே. விஸ்வநாதன் திறந்து வைத்தார். இந்த மையத்தில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள், உளவியல் ஆலோசகர் கள், மகளிர் போலீசார் அங்கம் வகிப்பார்கள்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உள்ளிட்ட புகார்கள் இந்த மையத்தில் விசாரிக்கப் படும். திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் இந்த மையத்திலேயே புகார்கள் பெறப்படும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த மையத்தில் உள்ள பிரதிநிதிகள், சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கும் சென்று பெண் வன்கொடுமைகள் உள்ளிட்ட புகார்களை விசாரிப்பார்கள். மேலும், 94983 – 36002 என்ற செல்போன் எண் மூலமூம் பெண்கள் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: