புதுதில்லி:
அஸ்ஸாமில் குடிமக்கள் தேசியப் பதிவேட்டில் பெயரில்லாதவர்களுக்கு எதிராக
வலுக்கட்டாய நடவடிக்கை எதுவும் எடுக்கப் படமாட்டாது என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிமொழி அளித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வெள்ளி காலை அஸ்ஸாம் மாநிலத்தின் குடிமக்கள் தேசியப் பதிவேடு தொடர்பாக உள்துறை அமைச்சர் பேசுகையில், “இது
வரைவு அறிக்கைதான். இதில் விடுபட்டிருப்பவர்களுக்கு, அந்நியர் நடுவர்மன்றத்தின் முன் வாய்ப்பளிக்கப்பட்டபின். சேர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பு உண்டு” என்று கூறினார்.முன்னதாக, இதன்மீதான விவாதத்தின் போது, அவர் பதிலளிக்கையில், குடிமக்கள்
தேசியப் பதிவேட்டில் பெயர் இல்லாதவர் களுக்கு எதிராக வலுக்கட்டாய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படமாட்டாது என்று உறுதி அளித்திருந்தார். இதனை இறுதிப்படுத்தும் பணி உச்சநீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க, நேர்மையாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியக் குடிமக்கள் எவரும் நீக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

டி.கே.ரங்கராஜன்
இப்பிரச்சனை தொடர்பாக உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், “உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விளக்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குடியுரிமைக்காகப் பெயர்களைக் கணக் கெடுத்துப் பதிவு செய்திடும்போது, அவரது சாதி அல்லது மதத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. எவரொருவரும் தண்டிக்கப்படக்கூடாது என்பதே. எங்களது பிரதான கோரிக்கை ஆகும். இதனை இறுதிப்படுத்துவதற்கு முன்பு மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை நடத்திட வேண்டும் என்றும், அவர்களுக்கு மேலும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்றும், இதற்கான காலத்தை நீட்டித்திட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

து.ராஜா
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் து. ராஜா பேசுகையில், அஸ்ஸாமில் எந்த மக்களுக்கு எதிராகவும், எவ்விதமான நட வடிக்கையையும் அரசாங்கம் அனுமதித்திடக் கூடாது. வரைவு குடிமக்கள் தேசியப் பதிவேட்டில் இல்லாதவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று நம்புகிறேன் என்றார்.(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.