லண்டன்:
14-வது உலகக்கோப்பை மகளிர் ஹாக்கி தொடர் ஜூன் 21-ஆம் தேதி முதல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தனது காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி சூட் அவுட் முறையில் 3-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியிடம் போராடி வீழ்ந்தது. காலிறுதி முடிவில் ஸ்பெயின்,ஆஸ்திரேலியா,அயர்லாந்து,நெதர்லாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.முதல் அரைறுதியில் அயர்லாந்து – ஸ்பெயின் அணிகளும் (இந்திய நேரடி மாலை 6:30 மணிக்கு),இரண்டாவது அரைறுதியில் ஆஸ்திரேலியா – நெதர்லாந்து (இந்திய நேரடி இரவு 9:00 மணிக்கு) மோதுகின்றன.இந்த இரண்டு ஆட்டங்களும் சனியன்று லண்டனில் உள்ள லீ வேலே மைதானத்தில் நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.