சென்னை,
அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறு மதிப்பீட்டில் முறைகேடு நடைபெற்றதாக முன்னால் தேர்வுத்துறை அதிகாரி பேராசிரியை உமாவை பல்கழைக்கழகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு நடத்திய தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மற்றும் மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவா்களை லஞ்சம் பெற்றுக் கொண்டு தோ்ச்சி பெற வைத்ததாகவும், மதிப்பெண்கள் அதிகம் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தேர்வு தாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தோ்வுத்துறை அதிகாரியும், பல்கலைக்கழக பேராசிரியையுமான உமாவை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடா்பாக உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கூறுகையில், உமா மீதான குற்றச்சாட்டு முதல் கட்டமாக நிரூபிக்கப்பட்டு அவா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவா் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது எந்த விதமான முறைகேடுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது. முறைகேடு குறித்த விசாரணை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறும். அண்ணா பல்கலை கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் மட்டுமே முறைகேடு நடந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பொறுப்பு முதல்வர் விஜயகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.