மதுரை;
தூத்துக்குடியில் மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 173 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க தூத்துக்குடி காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 242 வழக்குகளில் முதல் வழக்கை தவிர பிற வழக்குகளை ரத்து செய்யக் கோரி மனு வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த மே மாதம் 22 அன்று நடைபெற்ற போராட்டம் தொடர்பான ஒரு சம்பவத்துக்கு 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தவறு. முதல் வழக்குடன், மற்ற குற்றச்சாட்டுகளை வாக்குமூலமாக சேர்த்து ஒரே வழக்காக பதிவு செய்திட உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் ஜான் வின்சென்ட் என்பவர் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கு எண் 191 உடன் , மற்ற வழக்குகளை, 161ன் கீழ் ஒப்புதல் வாக்குமூலங்களாக சேர்த்து, ஒரே வழக்காக விசாரிக்க தூத்துக்குடி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: