புதுதில்லி:
தில்லி முதல் மீரட் வரை, ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில், ‘உலகத் தரத்தில்’ அமைக்கப்பட்ட அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் விரிசல் கண்டுள்ளது.
‘நாட்டின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமைவழிச் சாலை’ என்ற நாமகரணம் சூட்டி, கடந்த மே 27-ஆம் தேதிதான், பிரதமர் மோடி தில்லி – மீரட் நெடுஞ்சாலையைத் திறந்து வைத்தார். அத்துடன் இந்த சாலையில், திறந்த வாகனத்தில் சுமார் 10 கி.மீ. வரை பயணமும் மேற்கொண்டார்.உள்ளே செல்லும் வழி- வெளியேறும் வழி என்ற பிரத்யேக வடிவமைப்பு, சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள், ஒவ்வோர் ஐந்நூறு மீட்டர் தூரத்துக்கும் மழைநீர் சேகரிப்பு வசதி, வாகனங்களின் எடையைச் சோதிக்கும் சென்சார்கள்; வாகனங்களின் வேகத்தை கேமரா மூலம் கணக்கிட்டு, அதிவேகமாகச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் வசதி, சாலையில் பயணிக்கும் தூரத்துக்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் வசதி என இந்த நெடுச்சாலை முற்றிலும் தானியங்கி முறையை கொண்டது என்று அப்போது அவர் பெருமை பேசினார்.

இந்நிலையில், மோடி திறந்து வைத்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், இச்சாலையின் நடைபாதையில் விரிசல் ஏற்பட்டு, உலகத்தரத்திலான சாலையின் லட்சணத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி விட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.