தீக்கதிர்

மீசை வைத்ததற்காக தலித் இளைஞர் மீது தாக்குதல்..!

அகமதாபாத்;
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில், தலித் இளைஞர்கள் மீது சாதிவெறியர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

தற்போது மீசை வைத்ததற்காக தலித் இளைஞர் ஒருவரை அவர்கள் தாக்கியுள்ளனர்.
குஜராத் மாநிலம் பவ்லா மாவட்டத்திலுள்ள கவிதா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன்பாய் ராம்ஜீ மக்வானா. தலித் இளைஞரான இவர் சார்ட்ஸ் அணிந்ததற்காகவும், மீசை வைத்துக் கொண்டதற்காகவும் அப்பகுதியிலுள்ள ‘தர்பார் ராஜ்புத்’ சமூகத்தைச் சேர்ந்த சாதிவெறியர்கள் தாக்கியுள்ளனர்.

தற்போது மக்வானா அளித்த புகாரின் பேரில் 5 பேரை கைது செய்துள்ள போலீசார், ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர் அளித்த புகாரின் பேரில், தலித்துக்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கடந்த அக்டோபர் மாதமும், இதேபோல மீசை வைத்திருந்த காரணத்திற்காக தலித் இளைஞர் ஒருவர் அகமதாபாத்தில் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது