திருவாரூர்:
அமெச்சூர் கபடி கழகம் (திருவாரூர்) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 45-வது மாநில அளவிலான ஜூனியர் (ஆண்கள்) கபடி சாம்பியன்ஷிப் போட்டி திருவாரூரில் வெள்ளியன்று தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகின்றன.

32 மாவட்ட அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில்,8 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் சுற்று முறையில் 48 ஆட்டங்கள் நடைபெறும்.லீக் சுற்றில் முன்னிலை பெறும் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றில் களமிறங்கும்.

இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு,வெற்றியின் அடிப்படையில் கொல்கத்தாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் 45-வது தேசிய கபடி சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறும்.

Leave a Reply

You must be logged in to post a comment.