திருப்பூர்,
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் பிளாஸ்டிக் இல்லாத கல்லூரியாக மாற்ற வேண்டும் என்று மாணவர்களுக்கு துணிப்பை வழங்கி உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் இராமையா தலைமை வகித்தார். நாட்டு நல பணி திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை வழங்கினார்.  திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியர் ஷரவன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்’ என்ற நிகழ்வினை தொடங்கிவைத்தார். பின்பு கல்லூரி மாணவர்களுக்கு துணிப்பை வழங்கி, இனிமேல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தமாட்டோம், கல்லூரியை தூய்மையாக வைப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது. துணிப்பையை பயன்படுத்துங்கள் என வலியுறுத்தும் மாறுவேடமிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: