திருப்பூர்,
தமிழகத்தில் பிளஸ் 2 வணிகவியல் பிரிவு மாணவர்கள் பட்டயக் கணக்காளர் தேர்வில் சேர்வதற்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்படும் என்று மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர் திறன் மேம்பாட்டு மற்றும் வாழ்வியில் நெறிமுறை பயிற்சி பட்டறை வியாழனன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மைய நூலகங்களில் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது. தமிழக அரசின் இன்றைய பாடத்திட்டம் கியூ.ஆர். கோடு உடன் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கும் மேலாக உள்ளது. நடப்பு ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படும். வரும் கல்வியாண்டில் 30 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். பள்ளி மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் சூழலில், பள்ளிக்கல்வித்துறையின் உதவி மைய எண்ணான 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: பட்டய கணக்காளர்கள் நாட்டில் அதிகளவில் தேவைப்படுவதால், அந்த படிப்பை ஊக்குவிக்கும் வகையில் பிளஸ் 2 வணிகவியல் படிக்கும் மாணவர்களில், சி.ஏ., நுழைவுத் தேர்வுக்காக 25 ஆயிரம் பேரை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படும். நடப்பு ஆண்டிலேயே தேர்வு செய்து அந்த மாணவர்களுக்கு கல்லூரியில் 10 நாட்கள் பயிற்சி அளிப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இம்மாத இறுதிக்குள் அந்த பணிகள் நிறைவடையும். கல்வித்துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிப்பது குறித்து நீதித்துறை மற்றும் பணியாளர் நல துறையுடன் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. அது குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான ஊதியம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றார். மேலும், அவிநாசி சமையலர் பாப்பாள் தீண்டாமை விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதில்தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் எனவும் கூறினார்.

மாணவி குடும்பத்துக்கு வீடு
முன்னதாக சில ஆண்டு
களுக்கு முன் ஜெய்வாபாய் பள்ளிக்கு வரும்போது பஸ் விபத்தில் சிக்கி கால்களை பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி பிரியாவின் குடும்
பத்தாருக்கு வீரபாண்டி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டதற்கான அரசாணையை பிரியா
விற்கு அமைச்சர் செங்
கோட்டையன், வீட்டு
வசதித்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆகி
யோர் வழங்கினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.