மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் வியாழனன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்ததார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசித்து வந்த ஏ.கே.போசுக்கு  வியாழனன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

மறைந்த ஏ.கே.போஸ் கடந்த 2006-ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியிலும் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சரவணனோடு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

 

Leave A Reply

%d bloggers like this: