பெங்களூரு:
ஓடும் காரில் இருந்து குதித்து, சாலையில் கிகி என்ற நடனமாடும் விபரீத செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

கனடாவைச் சேர்ந்த பாப் பாடகரான டிரேக், இணைய தளம் வாயிலாக விடுத்துள்ள சவால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பிரபலமாகி வருகிறது. அதன்படி, அவர் பாடிய பாடலுக்கு, ஓடும் காரில் இருந்து சாலையில் இறங்கி ஆட வேண்டும் என்பதாக அந்த சவால் உள்ளது.
அந்த விபரீத சவாலை மேற்கொண்டு, அதுதொடர்பான வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.இது தமிழகத்திலும் பரவியுள்ளது. நடிகை ரெஜினா ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடி அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஆபத்து நிறைந்த நடன சவாலை யாரும் மேற்கொள்ள வேண்டாம் என்று தில்லி காவல்துறை எச்சரித்துள்ளது. சாலையில் நடனமாடினால் உங்களுக்கு வேறு கதவு திறக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்துள்ளது. சாலைகளில் கிகி நடன சவாலை ஏற்கத் தயார் என்றால் நிச்சயம் உங்களை சிறைக் கம்பிகளுக்கு பின்னால் நடனமாட விட்டுவிடு
வோம், கிகி சவால் உங்களை சிறைக்கு தள்ளிவிடும் என்று பெங்களூரு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: