தீக்கதிர்

குற்றாலத்தில் தடை, திற்பரப்பில் அனுமதி…!

நாகர்கோவில்;
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாகக் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் நீர் வரத்து குறைந்துள்ள நிலையில், வியாழக்கிழமையன்று முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.