சென்னை;
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி விரைந்து குணமடைய பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்தித்து நலம் விசாரிக்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் வியாழனன்று (ஆக.2) மருத்துவமனைக்கு வந்தனர்.

மருத்துவமனைக்குள் சென்று வந்த பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கலைஞர் கருணாநிதி பிறவியிலேயே ஒரு போராளி. அவர் பல சவால்களை சந்தித்துள்ளார். தற்போதும் அவர் தன் உடல்நிலையோடு போராடிக் கொண்டு இருக்கிறார். அவரது மனஉறுதி வலிமையாக உள்ளது. இதனால் அவரது உடல் நன்கு தேறியுள்ளது. கலைஞரை உடனிருந்து கவனித்து வரும் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என்னிடம் பேசுகையில், கலைஞர் உடல்நிலையில் நன்கு முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்தனர். அவர் விரைந்து குணமடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்” என்றார்.

Leave A Reply

%d bloggers like this: