திருச்சி;
முறைகேடு புகாரில் ஓய்வுபெறவிருந்த அறநிலையத்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுப்பப்பட்டது.இந்த புகாரைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயில் அறநிலையத் துறை உதவி ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் சிலைக் கடத்தல் முறைகேடுகள் தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த நடவடிக்கை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், விரைவில் ஓய்வு பெற இருந்த திருச்சி ஸ்ரீரங்கம் அறநிலையத் துறை உதவி ஆணையர் ரத்தினவேலை பணியிடை நீக்கம் செய்து, இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: