===எம்.கண்ணன் & என்.ராஜேந்திரன்===                                                                                                                              பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அதிகரிக்க பலவகையிலும் அரசு முயன்று வருகிறது. அதேநேரம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஏடிஎம் கார்டுகள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை உள்ளிட்டவற்றில் மோசடி குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

சைமாண்டெக் நடத்திய ஆய்வில், ஆன்லைன் பாதுகாப்பு மீறல்கள் நடப்பதில் இந்தியா 4வது இடம் வகிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில், அமெரிக்கா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் முன்னணியில் இருப்ப தாக கூறப்பட்டுள்ளது.மோசடி செய்வதற்கு இதுதான் வழி என்றில்லா மல் இப்படியும் முடியுமா? என்று கேட்கும் வகையி லான புதிய புதிய யுக்திகளைப் பயன்படுத்தி மோசடியாளர்கள் பணத்தை திருடுகின்றனர். பல திருட்டு சம்பவங்களில் தொகை குறைவானதாலோ என்னவோ வெளியே தெரியாமலே போய்விடுகின்றன. ஆன்லைன்
பணப் பரிவர்த்தனை மோசடியைத் தடுக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மோசடி பல ரகம்
மொபைல் எண்களை விளம்பரங்கள் மூலமோ, ரீச்சார்ஜ் கடைகள் மூலமோ, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமோ திரட்டிவைத்துக் கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட நபரை மொபைல்போனில் தொடர்பு கொண்டு வங்கி அல்லது இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவது போல தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, டெபிட்,கிரெடிட் கார்டுகளின் ரகசிய எண்ணை பெற்று மோசடி செய்வது.உங்கள் மொபைல் எண்ணிற்கு அழைத்து சிம்மில் பிரச்சனை உடனடியாக 121 எண்ணிற்கு மெஸேஜ் அனுப்புங்கள் அல்லது உங்கள் இணைப்பு துண்டிக்கப்படும் என்று பயமுறுத்தி குறுஞ்செய்தியை அனுப்ப வைப்பது. நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்திக்குப் பின்னால் என்ன நடக்கும் என்று பார்த்தால், புதிய சிம்மை உங்கள் எண்ணிற்கு மாற்றாகப் பெற்று அதனை
செயல்படுத்த பழைய சிம்மிலிருந்து செல்போன் நிறுவனத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும். அப்படி அனுப்பினால் பழைய சிம் இணைப்பு துண்டிக்கப்பட்டு புதிய சிம் செயல்படுத்தப்படும். சிம்மை எளிதாக மாற்றிக் கொள்ள செல்போன் நிறுவனம் வழங்கும் வசதியைப் பயன்படுத்தி மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளில் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

போலி ஆப்ஸ்
மேற்கண்ட வழிமுறைகள் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப அறிவின் துணையுடன் பல மோசடிகளும் நடைபெறுகின்றன. வங்கி இணையதளங்களைப் போலவே போலியான இணைய தளங்களை உருவாக்கி முன்பு மோசடிகள் செய்தனர். இப்போது வங்கிகளின் ஆப் போலவே போலி ஆப்களைதயார் செய்து அதன் மூலமாகவும் மோசடிகள் அரங்கேறியுள்ளன. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கூகுள் ப்ளே ஸ்டோரில் பிரபல தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி(ICICI), ஆர்.பி.எல்.வங்கி(RBL) மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி (HDFC) ஆகிய வங்கிகளின் செயலிகளைப் போன்றே போலியாக உருவாக்கப்பட்ட செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டு அதைப் பதிவிறக்கிப் பயன்படுத்தியவர்களிடம் வங்கிக் கணக்கு எண், ரகசிய குறியீட்டு எண், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எனப் பல விவரங்களும் திருடப்பட்டுள்ளன. தற்போது இந்த ஆப்களை தனது தளத்தில் இருத்து நீக்கிவிட்ட கூகுள் வங்கிகளைக் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுபோன்ற நூதன திருட்டுகளுடன் இப்போது அதிகமாக நடைபெறும் ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி கார்டு தகவல்களை பிரதி யெடுத்தல், ஏடிஎம் மையத்தைப் பயன்படுத்தத் தெரியாதவர்களிடம் உதவி செய்கிறேன் என்று கூறி கூடுதல் தொகையை எடுத்துக் கொள்வது எனப் பல மோசடி களும் அதிகரித்து வருகின்றன.இதுபோன்ற பண மோசடிகளில் அப்பாவிமக்கள்தான் சிக்குகிறார்கள் என்று எண்ண வேண்டாம், கணினிப் பொறியாளர்களும்கூட சிக்கிபணத்தை இழந்திருக்கின்றனர்.

அதற்குக் காரணம் செல்பேசி இணைப்பு துண்டிக்கப்படும் அல்லது வங்கிக் கணக்கு செயல்படாது என்று சொன்னவுடன் நமக்கு ஏற்படும் ஒரு சில நிமிட பதற்றம்தான். இந்தப்பதற்றத்தில் எதிர்முனையிலிருப்பவர்களின் வலையில் விழுகிறோம். இதுபோன்ற தருணங்களில் பதற்றத்தை விட எச்சரிக்கை உணர்வுதான் அதிகமாக இருக்கவேண்டும்.

எச்சரிக்கையாக இருக்க சில வழிகள்
வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங் களில் நம்மைப் பற்றிய சொந்தத் தகவல்களை பகிரும்போது கவனமாக இருக்கவேண்டும். வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களைப் பதிவிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் வங்கிக் கணக்கு, இன்சூரன்ஸ், ஏடிஎம் – டெபிட் – கிரெடிட் கார்டு குறித்த தகவல்களை யார் கேட்டாலும் தெரிவிக்கக் கூடாது.இதுபோன்ற கார்டுகளைக் கொண்டு பொருட் களை வாங்கும்போதும், ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும்போதும் அருகிலுள்ள நபருக்குத் தெரியாமல் ரகசிய எண்ணை உள்ளிடவேண்டும்.ரகசிய எண்ணு டன் மொபைல் OTPயையும் பயன்படுத்தும் வசதி இருந்தால் ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.ஏடிஎம் மையங்களில் கார்டு செருகும் பகுதி மற்றும் மெஷினில்  வித்தியாசமான பொருட்கள் ஏதேனும் இருப்பதாகத் தோன்றினால் அந்த மையத்தைப் பயன்படுத்தாதீர்கள். வங்கிக்கு அல்லது காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும். பணப் பரிவர்த்தனைக்கான ஆப்களை பதிவிறக்கும் முன் அந்த ஆப்பின் தயாரிப்பாளர் யார்,வங்கியின் அதிகாரப்பூர்வ ஆப்தானா என்பதை யெல்லாம் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துவிட்டு பதிவிறக்கவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.