திருப்பூர்,
திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் வழங்க இழுத்தடிப்பதுடன் துணை வட்டாச்சியர் அலுவலகத்திலேயே இருப்பதில்லை என குற்றம் சாட்டி பொதுமக்கள் புதனன்று திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் வடக்கு, தெற்கு என இரண்டு தாலுகா அலுவலகங்கள் உள்ளன. இதில் திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு பேருந்து வசதி அதிகம் இல்லை. இதனால் பொதுமக்கள் தாலுகா அலுவலங்களுக்கு செல்வது வெகுவாக குறைந்தன.இந்நிலையில், இ-சேவை மையங்கள் வந்த பின் தாலுகா அலுவலங்களுக்கு பொதுமக்கள் செல்வது மேலும் குறைந்தன. ஆனால் பட்டா மாறுதல்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் இதர விண்ணப்பங்களை தாலுகா அலுவலங்களில் அளித்தனர். இதை அதிகாரிகள் பார்வையிட பல நாள்கள் தாமதப் படுத்தப்படுகின்றன.மேலும் இது வரை எந்த பணியும் நடைபெற்றாமல் உள்ளதாகவும், அதிகாரிகளும் அலுவலகத்தில் இருப்பதில்லை. மேலும், அவரின் உதவியாளரை கேட்டால், அவர் வெளியே சென்றுள்ளதாக கூறுகின்றனர்.

இதனால், திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தகவலறிந்து தெற்கு வட்டாச்சியர் ரவிச்சந்திரன் பொதுமக்களை சமரசம் செய்து விரைவில் சான்றிதழ் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.