தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் புதனன்று ஏற்பட்ட அமில கசிவில் 2 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

தமிழக அரசின் உத்தரவின்படி மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சேகரித்து வைக்கப்பட்டுள்ள கந்தக அமிலத்தினை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆலையில் புதனன்று ஏற்பட்ட அமிலக் கசிவில் ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

புதனன்று அமிலம் நிரம்பியுள்ள கொள்கலனின் வால்வைத் திறக்கும்போது , சிறிய அளவில் அமில கசிவு ஏற்பட்டுள்ளது. இந்தக் கசிவால் பாலசுப்ரமணியன் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இரண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் காயமடைந்தனர். 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: