சண்டிகார், ஆக.1-

மக்கள் விரோத மோடி அரசாங்கத்தை வீழ்த்திட அனைத்து இடது, மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்று ஹர்கிசன்சிங் சுர்ஜித் அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவுநாள் கொண்டாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அறைகூவல் விடுத்தார்.

பஞ்சாப் மாநிலத் தலைநகர் சண்டிகாரில் ஹர்கிசன் சிங் சுர்ஜித் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவுநாள் மிகவும் எழுச்சியுடன் நடந்தது. அதில் பங்கேற்று சிறப்புரையாற்றும்போதே சீத்தாராம் யெச்சூரி இவ்வாறு கூறினார். மேலும் அவர், கூறியதாவது:

மோடி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தையே சின்னாபின்னமாக்கி விட்டது. ஆட்சிக்கு வரும்போது அளித்திட்ட வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றிடவில்லை. மக்களின் எதிர்காலம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சமூகத்தில் மக்கள் மத்தியில் நிலவிவந்த நல்லிணக்க உறவுகளையே சீர்குலைத்துக்கொண்டிருக்கிறது. மதச்சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பெண்கள் எப்போதும் ஒருவிதமான அச்ச உணர்வுடன் வாழக்கூடிய அளவிற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மேலும் குண்டர் கும்பல்கள் கொலை செய்வது என்பது நாள்தோறும் நடைபெறும் நிகழ்வாக மாறியிருக்கிறது. இந்திய  இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.”

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.