தஞ்சாவூர்: 
தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் கழகத்தின் சார்பில் 44-வது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் மதுரை ரைபிள் கிளப்பில் ஜூலை மாத இறுதியில் நடைபெற்றது.
ரைபிள்,பிஸ்டல் (10 மீ,25 மீ,50 மீ) பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினருக்கும் தனித்தனியே நடைபெற்ற இந்த தொடரில் மாநிலம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த வஜீர் அலி (44) 314 புள்ளிகள் (314/400,80%) பெற்று சிறப்பு சாதனை படைத்தார்.மாநில அளவிலான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வஜீர் அலி பெற்றிருப்பது சாதனைக்கான புள்ளிகள் இல்லை என்றாலும்,44 வயதில் 80 சதவீத புள்ளிகள் பெறுவது ஆச்சர்யமான விஷயம்தான்.இது ஒருபுறம் இருக்க டெல்டா பகுதியிலிருந்து (கடலோரம்-அதிராம்பட்டினம்) துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் கலந்து கொள்ளும் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து  வஜீர் அலி கூறுகையில்,”மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் அதிராம்பட்டினத்தின் சார்பாக களமிறங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.எதிர்காலத்தில் கடலோர டெல்டா பகுதியில் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் ஆர்வம் உள்ள மாணவர்களை ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கவும் அதற்கான,பயிற்சி மையத்தை அதிராம்பட்டினத்தில் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளேன்.துப்பாக்கி சுடுவதில் சிறந்த வீரர்களை உருவாக்கி நமது நாட்டிற்கு பெருமையைத் தேடித் தர வேண்டுமென்பதே என் நோக்கம்”எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.