கோவை,
மாதந்தோரும் மருத்துவப்படி ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அரசுத்துறை ஓய்வூதியர் சங்க ஆண்டு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க 4 ஆவது ஆண்டு பேரவை கோவை தாமஸ்கிளப்பில் புதனன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற பேரவையில் துணைதலைவர் அங்குரத்தினம் வரவேற்புரையாற்றினார். பேரவையை துவக்கிவைத்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.சந்திரன் உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர் எஸ்.மதன், பொருளாளர் நடராஜன் ஆகியோர் அறிக்கை முன்வைத்து பேசினர். மாவட்ட கருவூல அலுவலர் ப.சண்முகானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் டி.எஸ்.சேஷாத்ரி, ஓய்வூதியர் சங்கங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.சின்னசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்.

முன்னதாக, பேரவையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மற்றும் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்கு, வருவாய் கிராம உதவியாளராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு 1995 ஆம் ஆண்டிற்கு முந்தைய பணிக்காலத்தில் பாதியை ஓய்வூதியத்திற்கு கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும். கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு கோவை மாநகராட்சியே விநியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவை கூட்டத்தை நிறைவு செய்து சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டி.கனேசன் உரையாற்றினார். இம்மாநாட்டில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் வி.ஆர்.சாந்தாமணி நன்றி கூறினார். முன்னதாக இந்திய மாணவர் சங்கத்தின் 25 ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 17ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு ஓய்வூதியர்கள் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும் என சங்கத்தின் மாநில துணை த்தலைவர் எஸ்.சந்திரன் பேரவையில் அறைகூவல்விடுத்தார். இதனையடுத்து ரூ.10 ஆயிரம் மாணவர் சங்க மாநாட்டு நிதியாக ஓய்வூதியர்கள் வழங்கினர்.

Leave A Reply

%d bloggers like this: