மத்திய பிரதேசத்தில் குடும்பதினரின் விருப்பபடி படி திருமணம் செய்ய மறுத்த புதுமணத்தம்பதியினரை சிறுநீர் குடிக்க வைத்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஹர்தாஸ்பூரில் ஒரு இளம் ஜோடியினர் தாங்கள் காதலிப்பது குறித்து பெற்றோரிடம் தெரிவித்து, இருவரையும் திருமணம் செய்து வைக்க கோரியிருக்கின்றனர். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர் காதல் திருமணம் செய்யக்கூடாது என மிரட்டியிருக்கின்றனர்.

இந்நிலையில் குடும்பத்தினருக்கு தெரியாமல் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த காதலர்களின் குடும்பத்தினர் புதுமணத்தம்பதியினரை கடத்திச் சென்றனர். பின்னர் மணமகளின் தலைமுடியை வெட்டி சித்தரவதை செய்ததோடு, இருவரையும் சிறுநீரை குடிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய  முக்கிய குற்றவாளிகளான இருவரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.