சென்னை,

சென்னையில் ஷெனாய் நகர் ,கோயம்பேடு ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களை அனைத்துப் பணிகளையும் பெண்களே நிர்வகிக்கும்   புதிய நடைமுறையை மெட்ரோ ரயில் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
இதுபற்றி இன்று செய்தி வெளியிட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், பெண்களை மேம்படுத்தும் விதமாக நிலையத்தில் அறிவிப்பு செய்வது,டிக்கெட் கொடுப்பது, கண்காணிப்புப் பணி, பயணிகளைப் பரிசோதனை செய்வது, துப்புரவு உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் பெண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் இந்தப் புதிய நடைமுறை ஜூலை 31ஆம் தேதி ஷெனாய் நகர் நிலையத்திலும் ஆகஸ்டு 1 ஆம் தேதி கோயம்பேடு நிலையத்திலும் அமல்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

You must be logged in to post a comment.