கோவை,
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தென்னை விவசாயிகளின் நீரா பானம் விற்பனை திங்களன்று துவங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 10 தென்னை உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், 65 தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள், 2,159 தென்னை விவசாயிகளும், 1,500 நபர்கள் பங்குதாரர்களாக உள்ள விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நீரா பானம் விற்பனை துவங்கப்பட்டது. தென்னம்பாளைகளிலிருந்து வடித்தெடுக்கப்படும் இளம் பழுப்பு நிறமுள்ள தித்திப்பான தாவரச்சாரே நீரா பானம் ஆகும். இதில், அதிகளவு இரும்புச் சத்தும், பாஸ்பரஸ் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் அடங்கியுள்ளதால் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியதாகும். மேலும், நீரா பானம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களான நீரா க்ரிஸ்டல் சுகர், நீரா ஹனி, நீரா பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற பொருட்கள் உயர்தரமான முறையில் தயாரிக்கப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: