திஸ்பூர்,

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என்று தெலுங்கானவை சேர்ந்த  பாஜக எம்எல்ஏ பேசியிருப்பது தேசிய அளவில் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.  அதில் எதிர்க்கட்சி தலைவர்கள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டு 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது தெரிய வந்திருக்கிறது.  இந்த விவகாரம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த பிரச்சனை ஒரு பக்கம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ டி.ராஜா சிங் என்பவர் “வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எப்படி இந்தியாவில் இருக்கலாம். அவர்களை மத்திய அரசு விரட்டியடிக்க வேண்டும். இல்லையென்றால், மற்ற நாடுகளில் அத்துமீறி நுழைபவர்களை சுடுவதுபோல சுட வேண்டும். பங்களாதேஷைச் சேர்ந்தவர்களோ அல்லது ரொஹிங்கியா முஸ்லிம்களோ, அமைதியான முறையில் அவர்கள் வெளியேறவில்லை, என்றால் சுடத்தான் வேண்டும்”  என விஷமத்தை கக்கியிருக்கிறார்.  இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஐதராபாத் கோஷாமஹால் பகுதி எம்.எல்.ஏ ஆன ராஜா சிங், இது போன்று பல விஷமக்கக்ருத்துக்களை தொடர்ந்து பேசி வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.  ஏற்கனவே ஐதாராபாத்தை மினி பாகிஸ்தான் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற விஷம கருத்துக்களை பரப்பி வன்முறையை தூண்டும் வகையில் செயல்படும் எல்எல்ஏ ராஜா சிங்கை பாஜக தலைமை கண்டிப்பதற்கு பதிலாக அதனை வளர்த்துவிடும் வகையில் மவுணம் காத்து வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.