சென்னை,
வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புண்டு. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக குமரி, நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யலாம். கடந்த 24 மணி நேரத்தில் காட்டுக்குப்பத்தில் 9 செ.மீ., மதுராந்தகத்தில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.