ஈரோடு,
சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வை தமிழக அரசு முழுமையாகத் திரும்பப் பெறவேண்டும். பாதாள சாக்கடை வரி, குப்பை வரி, நூலக
வரி என பொதுமக்களிடம் கொள்ளையடிப்பதை கைவிடவேண்டும். ஈரோடு மாநகர மக்களுக்கு குடிநீர், சாலை, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று ஈரோடு பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி
னர். தாலுகா நிர்வாகிகள் பொன்.பாரதி, சங்கரன், ராஜூ ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: