கோவை,
கோவையில் இன்று நடந்த சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சுந்தராபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில்  விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: