கோவை,

கோவையிலிருந்து பெள்ளாச்சி நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே நின்று கொண்டு இருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவட இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோவை பொள்ளாச்சி சாலையிலுள்ள சுந்தராபுரம் ஐயர் மருத்துவமனை அருகே அதிவேகமாக ஆடி கார் ஒன்று வந்துள்ளது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த  கார் எதிரே நின்று கொண்டு இருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் அப்பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் 10 பேர் மீது மோதியது. இந்த விபத்தில் 5 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கார் கோவை ஈச்சனாரியிலுள்ள ரத்தினம் கல்லூரியின் உரிமையாளரின் கார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: