நான்ஜிங்: 
சீனாவில் நடைபெற்று வரும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் கடும் போராட்டத்துடன் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

புதனன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்,ஸ்பெயினி நாட்டின் பாப்லோ அபியனை எதிர்கொண்டார்.தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் ஸ்ரீகாந்த் கைப்பற்ற இரண்டாவது செட்டை அபியன் 12-21 என்ற செட் கணக்கில் பதிலடி கொடுத்தார்.
வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஸ்ரீகாந்த் 21-14 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார்.இறுதியில் ஸ்ரீகாந்த் 21-15,12-21,21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரணோய் பிரேசில் வீரர் யோகரிடம் 8-21,21-16,21-15 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

வெளியேறிய இந்திய ஜோடிகள் (5 மணி நிலவரம்): 
அஸ்வினி பொன்னப்பா – ரெட்டி.என்.சிக்கி (மகளிர் இரட்டையர்)
ராங்கி ரெட்டி – சிராக் செட்டி (ஆடவர் இரட்டையர்)

Leave A Reply

%d bloggers like this: