நாமக்கல்,
இலவச வீட்டு மனை நிலம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் ஒன்றியத்தில் கொக்கராயன்பேட்டை, அம்மாசிபாளையம், ஆலங்காடு ஆகிய பகுதி மக்களுக்கு அரசு அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்ட இலவச வீட்டு மனை நிலம் வழங்க வேண்டும் எனவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட்ட பகுதியில் உள்ள ஒருசில நபர் இடையூறு செய்து வருகின்றனர். ஆகவே இடையூறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதனன்று குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலைவர் சி.துரைசாமி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சம்பூரணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, குமாரபாளையம் வட்டாட்சியர் ரகுநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பின்னர் வட்டாட்சியர் கூறியதாவது, அரசு சார்பில் வீட்டு மனை நிலம் எடுத்து தருகிறேன் என வாக்குறுதி அளித்தார்.பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: