இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலம்பெங் நகரத்தில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடக்கவுள்ளது.  ஆகஸ்ட் 18ல் துவங்கும் இப்போட்டிகள் செப்டம்பர் 2 ல் வரை நடைபெறவிருக்கிறது.ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சிலில் இடம் இடம் பெற்றுள்ள இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்கள் கொலை குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் பாஜக எம்பி பிரிஜ் புஷன் சிங் தலைமையில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த  பாஜக எம்.பி பிரிஜ் புஷன் சிங். இவர்  மீது கொலைக்குற்றச்சாட்டு, கொலை முயற்சி மற்றும் பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் தொடர்புடையவர் ஆவார். இவர் 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது தாக்கல் செய்திருக்கும் பிரமாண பத்திரத்தில் தன் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது குறித்து தெரிவித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட ஒருவரின் தலைமையில்தான் இந்திய விளையாட்டு வீரர்கள் அணிவகுத்து 18 வது ஆசிய விளையாட்டு போட்டிக்கு செல்ல வேண்டுமா?. உடனே அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிஜ் புஷன் சிங் என் மீதான குற்றச்சாட்டுகளில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. நீதிமன்றம் என்னை குற்றவாளி என இன்னும் அறிவிக்கவில்லை. ஆகவே நான் தலைமையேற்று செல்வதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.