சபரி மலையில் பெண்கைள அனுமதிக்க கூடாது என்பதற்கு ஒரு வக்கீல் இப்படி வாதிட்டார்: “அய்யப்பன் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி; அவர் இளம் பெண்கள் தன்னை தரிசிக்க வருவதை விரும்பவில்லை”. (டிஒஐ ஏடு) கடவுள் யாருக்கும் பிடிபடாதவர் என ஒரு புறம் சொல்லுகிறார்கள்; மறுபுறம் அவரே நியமித்த வக்கீல் போல ஒருவர் பேசுவதை ரசிக்கிறார்கள்! உண்மையில் அவர் ஒரு பக்தரின் சார்பாகத்தான் வழக்கு போட்டிருக்கிறார்! மனிதர்களாக
ஏற்படுத்தியுள்ள ஒரு தடையை கூச்சமின்றி கடவுளின் பெயரால் ஏற்றி சொல்லுகிறார்கள்! இந்த ஏமாற்று நாடகம் எத்தனை நாளோ? இதிலே பிற மதங்களில் உள்ள பெண்களின் நிலையை சுட்டி இவர்கள் பெண்களை கேவலப்படுத்துவதை நியாயப்படுத்துகிறார் இதே வக்கீல். இந்து மதத்தில் தான் பெண்கள் தெய்வமாக வணங்கப்படுகிறார்கள் என்கிறீர்களே, ஏன்
அந்தப் பெண்களை கோயிலுக்குள் நுழைய தடை செய்ய வேண்டும்? பெண்ணுரிமையை மதிப்பதில் பெரும்பான்மை மதமாகிய இந்து மதம் வழி காட்டட்டும். அது பிற மதங்களின் கண்களையும் திறக்கும்.

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: