அந்தப் பகுதி மக்களின் கருத்துக்களை யாரும் சென்று கேட்கவும் அனுமதி இல்லை. அந்தப் பகுதி மக்களிடம் தங்கள் கருத்துக்களைச் சொல்லவும் அனுமதி இல்லை.

இவையெல்லாவற்றையும் மீறி சி.பி.எம் கட்சி எட்டுவழிச்சாலையை எதிர்த்து இன்று முதல் ’என் நிலம் என் உரிமை’ என ஏழு நாட்கள் நடை பயணத்தை அறிவித்திருக்கிறது. தமிழக அரசு எதிர்பார்த்தது போல அனுமதி மறுத்துள்ளது. அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவும் இங்கு அனுமதி இல்லையென்றால் இது ஜனநாயக நாடா என்னும் கேள்வி முன்னுக்கு வருகிறது. எட்டுவழிச் சாலைக்கு எதிராக வாய் திறக்காதவர்கள், ஜனநாயக உரிமைகள் இப்படி மறுக்கப்படுவதையாவது தார்மீக ரீதியாக எதிர்க்க வேண்டும்.

மக்களிடையே பிரிவினையையும், மோதல்களையும் உருவாக்கும் இந்துத்துவ சக்திகளின் யாத்திரைகளுக்கு இங்கே எந்தத் தடையுமில்லை. கட்டுப்பாடும் இல்லை. ஆனால் மக்களுக்காக மக்களின் பிரச்சினைகளைப் பேசுகின்ற நிகழ்வுகளுக்கு இங்கே அனுமதிகள் மறுக்கப்படுகின்றன.

மக்களுக்காக நிகழ்கிற மிக முக்கிய இந்த நடைபயணத்தின் பக்கம் எந்த ஊடகங்களும், தங்கள் பார்வையைத் திருப்பாமல் இருக்கின்றன. மக்களிடம் கம்யூனிஸ்டுகள் நெருங்காமல் இருக்கிறார்கள் என அங்கலாய்க்கிறவர்களும், அவதூறு செய்கிறவர்களும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இருக்கட்டும்.
தடுப்பவர்கள், அமைதி காக்கிறவர்கள், வேடிக்கை பார்க்கிறவர்கள் எல்லோரும் இந்த நாளை குறித்து வைத்துக் கொள்ளூங்கள்.

மக்களை நம்புகிறவர்கள் கம்யூனீஸ்டுகள்.
மக்களுக்காக போராடுகிறவர்கள் கம்யூனிஸ்டுகள்.
அவர்கள் மக்களிடம் செல்கிறார்கள் நடை பயணமாக…..

#Cpim4LandRights #என்நிலம்என்உரிமை

Mathavaraj

Leave a Reply

You must be logged in to post a comment.