சென்னை,
கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்ட மலைப் பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்துள்ளது. தென் தமிழக பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், அதிகபட்சமாக 55 கிலோ மீட்டர் வரை பலத்தகாற்று வீசும் என்றும், தென் தமிழகக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மேகங்கள் உருவாகி, சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.