புதுதில்லி;
பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுக் குற்றங்களில் முதலிடம் பெற்று, ஏற்கெனவே பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முதலிடம் பெற்றிருந்தனர்.தற்போது ஆள்கடத்தல் வழக்குகளிலும் பாஜக எம்.பி. எம்.எல்.ஏ.க்களே முதலிடத்தைத் தட்டிச் சென்றுள்ளனர்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், இதுதொடர்பான தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் மொத்தமுள்ள 770 எம்.பி மற்றும் 4 ஆயிரத்து 86 எம்.எல்.ஏ-க்களில், ஆயிரத்து 24 பேர் மீது, அதாவது, 21 சதவிகிதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் கடத்தல் வழக்குகள் மட்டும் 64 எனும் நிலையில், இந்திய அளவில் பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதே அதிகமான வழக்குகள் உள்ளன. பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பாஜக-வுக்கு அடுத்ததாக காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா 6 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன. தொடர்ந்து, பிஜூ ஜனதா தளம், தி.மு.க, சமாஜ்வாதி கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

மாநிலங்கள் வாரியாக எடுத்துக் கொண்டால் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநில எம்.எல்.ஏ-க்கள் மீது 9 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 8 வழக்குகளும் மேற்குவங்க எம்.எல்.ஏ-க்கள் மீது 7 வழக்குகளும் ஒடிசா, தமிழ்நாடு ஆகிய மாநில எம்.எல்.ஏ-க்கள் மீது நான்கு வழக்குகளும் ஆந்திரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில எம்.எல்.ஏ-க்கள் மீது மூன்று வழக்குகளும் பதிவாகியுள்ளன.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: