“சகல தொழிலையும் கள்ளகூட்டு முதலாளித்துவம் என்பது இந்தியா தனது
பொருளாதார ஆற்றலை வெளிப்படுத்த உதவாது” என்று தலையங்கம் தீட்டி
யுள்ளது டிஒஐ ஏடு. எனவே தொழிலதிபர்களுக்கு ஆதரவாக மோடி பேசியதை
அது உற்சாகமாக வரவேற்றுள்ளது. கள்ளகூட்டு முதலாளித்துவம் எனும்
சொல்லாடலே அது ஒட்டுமொத்த முதலாளித்துவத்தை குறிக்கவில்லை
என்பதை உணர்த்துகிறது.

முதலாளித்துவத்தின் ஓர் அடிப்படை கூறாகிய சுதந்திரப் போட்டிக்கு முரணாக ஆட்சியாளர்கள், அதிகாரிகளோடு பேரம் பேசி சில பெரு முதலாளிகள் மட்டும் முறையற்ற ஆதாயம் பெறுவதுதான் கள்ளகூட்டு முதலாளித்துவம். அதற்கான கச்சிதமான உதாரணம்தான் ரபேல் ஒப்பந்தம். அதில் ஒரு பொதுத்துறை நிறுவனம் விலக்கப்பட்டு மோடிக்கு வேண்டிய ஒரு பெரு முதலாளித்துவ நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாகவே அங்கே அநியாய விலை நிச்சயக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கள்ளகூட்டு முதலாளித்துவம் நமது பொருளாதார வளர்ச்சிக்கு
பெரும் கேடு பயப்பது. இதை மறைக்கத்தான் மோடி வாய்ஜாலம் காட்டுகிறார்.
அதற்கு இந்த ஏடு முட்டு கொடுப்பது அதன் மரியாதையை குறைக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: