நாமக்கல்,
மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்க மாதந்திர சிறப்பு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் நடத்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்க நாமக்கல் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நாமக்கல் மாவட்ட முதல் மாநாடு ராசிபுரத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சீனிவாசன் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் சிறப்புரையாற்றினார். மாநில உதவி தலைவர் எஸ்.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் ராணி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினர்.

இதில், உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் பெயர்களை குடும்ப அட்டையில் இருந்து நீக்குவதை கண்டித்தும், இதனால் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்துவருவது குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து உதவிதொகை வழங்குவதை காரணம்காட்டி குடும்ப அட்டையில் பெயர்களை நீக்குவது சட்டவிரோதசெயல் என்றும், சமூக நலத்துறை அமைச்சர் வசிக்கும் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் இந்த அவல நிலையை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்க கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் சிறப்பு கூட்டம் இதுவரை நடைபெறவில்லை. ஆகவே செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சி
யர் அலுவலகத்தை முற்றுகையிடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவராக கல்யாணி, மாவட்ட செயலாளராக எஸ். சீனிவாசன், மாவட்ட பொருளாளராக ஜெயப்பிரகாஷ், மாவட்ட துணை தலைவர் எம்.சீனிவாசன், மாவட்டத் துணைச் செயலாளர் புனிதா உட்பட 7 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வுசெய்யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.