இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் – எமது கட்சியின் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மறைந்து ஆகஸ்ட் 1 (இன்று) பத்தாண்டுகள் ஆகின்றன. மகத்தான விடுதலை போராட்ட வீரரான தோழர் சுர்ஜித்தை இந்த தேசம் இழந்த நாளையொட்டி செவ்வாயன்று பஞ்சாப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றேன். தோழர் சுர்ஜித்தின் அர்ப்பணிப்பு, சித்தாந்தம், செயல் உறுதி அனைத்தும் இன்றைக்கும் நம்மை வழிநடத்துகின்றன.

கார்ப்பரேட் தொழிலதிபர்களுடன் நெருக்கமாக இருப்பதில் பெருமைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். இதுதான் அவரது குஜராத் மாடல். அவரது தேர்தல்கால மோசடி பேச்சுக்கள் ஒவ்வொரு நாளும் அம்பலமாகி வருகின்றன. தனது கார்ப்பரேட் கூட்டுக் களவாணி நண்பர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் கோடானுகோடி இந்திய மக்களுக்கு அளவிட முடியாத பெரும் துயரங்களையும் தந்ததே நரேந்திர மோடி ஆட்சியின் பெரும் சாதனையாகும்.

Leave A Reply

%d bloggers like this: