நாமக்கல்,
எலச்சிபாளையம் ஒன்றியம் பெரியமணலி அரசு மேல் நிலைப்பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உள்ள பெரியமணலி அரசு மேல் நிலைப்பள்ளி வேலகவுண்டம்பட்டி சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் தொன்டிபட்டி, வேப்பம்பட்டி, ஜேடர்பாளையம், குமரவேலிபாளையம், புள்ளாச்சிபட்டி, குருக்கபுரம், எளையாம்பாளையம் பெருமாகவுன்டம்பட்டி வட்டகாடு உள்ளிட்ட பகுதியி சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 40 வருடமாக இயங்கிவரும் பள்ளியின் முன்பு மாநில நெடுஞ்சாலை உள்ளது. பள்ளி முன்பு சமீபகாலமாக இரு சக்கர வாகனம், நான்கு சக்கரவாகனத்தில் வருவோர்கலாள் ஏராளமானவிபத்துகள் நடைபெறுகிறது. இதனால் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். இச்சாலையில் கனரக வாகனங்கள் அதிக வேகத்துடன் செல்வதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே தமிழக அரசும், நெடுஞ்சாலைத்துறையினரும் மாணவர்கள் நலன் கருதி இப்பள்ளியின்முன்பு வேகத்தடை அமைத்து விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: