புதுதில்லி, ஜூலை 29-

நாடு முழுதும் அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு,  பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய தலைமை நிர்வாகிகள் கூட்டமும், தேசிய
செயற்குழு கூட்டமும் புதுதில்லியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.  தேசிய நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு தேசிய தலைவர் அபித்முகர்ஜி தலைமைதாங்கினார்.  தேசிய பொதுச்செயலாளர் சந்திர நவ்தீப் பார்தி, இணை பொதுச்செயலாளர்
ஹரிகிருஷ்ணன், பொருளார் பிரகாஷ் சந்திரமோகன்தி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தின் முடிவுகளை விளக்கி, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய  செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன்  கூறியதாவது: .

தேசிய பெண் ஆசிரியர் பொது மன்றத்தின் (National Forum for Women Teachers) சார்பில் தேசிய  அளவிலான மகளிர் மாநாடு தமிழகத்தில் நடத்துவது. அதற்கு முன்னர் அனைத்து மாநிலங்களிலும் மாநில பெண் ஆசிரியர் மாநாடுகளை நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இந்திய மொத்த நாட்டின்  மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) யில்  6 சதவீதமும் மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் 10 சதவீதமும்பள்ளிக்கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

தனிநபர் வருமான வரி வரம்பினை ஐந்து இலட்சமாக உயர்த்திட வேண்டும். மேலும்.5 இலட்சம் ரூபாய் முதல் 8 இலட்சம்ரூபாய் வரை உள்ளவருமானத்திற்கு 10% வரியும், 8 முதல் 13 இலட்சம் ரூபாய் வரை 20% வரியும், 13 இலட்சம் ரூபாய்க்கும் மேல் 30% சதவீத வரியும் விதிக்கும்வகையில் திருத்தம் செய்திட வேண்டும். வருமான வரி செலுத்தும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பொதுவான கழிவாக (Standard Deduction)குறைந்தபட்சம் ஆண்டிற்கு ரூபாய் ஐம்பதாயிரம் என திருத்தியமைக்க வேண்டும்.

வீட்டு வாடகைப்படி, மருத்துவ படி, அகவிலைப்படி, மருத்துவ செலவினம் மீள பெறுதல் ஆகியவை மேற்கொள்ளும் செலவினங்களுக்காகதரப்படும் படி ஆகையால் இதனை வருமானமாக கருதாமல் செலவினமாக கருத வேண்டும். 80C பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்பிற்கான கழித்தொகையை மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தினை
ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்திட  வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கு தில்லி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, அஸ்ஸாம், பாண்டிச்சேரி, ஆந்திர பிரதேசம், மேற்குவங்கம், ஓடிசா, ஹரியானா, ராஜஸ்தான்,திரிபுரா, தெலுங்கானா, பஞ்சாப், பீகார், ஜம்மு காஷ்மீர், மேகாலயா, உள்ளிட்ட 25 மாநிலங்களில் உள்ள ஆசிரியர் சங்ககங்களின் தேசிய
செயற்குழுஉறுப்பினர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்துதேசிய துணைத்தலைவர்கள் கே.ராஜேந்திரன், தமிழ்நாடு ஆரம்பபப்பள்ளி ஆசிரியர்கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர்
எஸ்.மயில், செயலாளர் மற்றும் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர்கே.பி.ஓ.சுரேஷ்

தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில கௌரவ தலைவர் அ.மாயவன்,தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்சங்க மாநில பொதுச்செயலாளர் எ.சங்கர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைபின் மாநில பொதுச்செயலாளர் பி.பேட்ரிக்ரெய்மன்ட், தனியார்பள்ளி ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் சிஸ்ரீரமேஷ், தமிழ்நாடு பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர்
டி.உதயசூரியன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலப்பொதுச்செயலாளர் எம்.ரவிச்சந்திரன், தமிழ்நாடு வட்டாரவளமைய ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் சி.முருகன், ஆகியோர் பேசினார்கள்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.