சென்னை,
தையல் கலைஞர்கள் சம்மேளனத்தின் 5ஆவது மாநில மாநாடு சென்னை வன்ணாரப்பேட்டையில் திங்கள், செவ்வாய் (ஜூலை 30, 31) ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

சம்மேளன தலைவர் கே.செல்லப் பன் தலைமை தாங்கினார். வி.முரளி கொடியேற்றினார். வரவேற்புக் குழு தலைவர் பி.எம்.குமார் வரவேற்றார். துணை பொதுச் செயலாளர் பி.சுந்தரம் அஞ்சலி தீர்மானத்தை முன் மொழிந்தார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உரையாற்றினார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் ஆர்.வேலுச்சாமி சமர்ப்பித்தார். வரவு-செலவு அறிக்கையை எம்.அய்டாஹெலன் சமர்ப்பித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை வாழ்த்திப் பேசினார். சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் டி.ஏ.லதா மாநாட்டை நிறைவு செய்து பேசினார். வரவேற்புக்குழு செயலாளர் பி.கோவிந்தசாமி நன்றி கூறினார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:மகளிர் தையல் கூட்டுறவு சங்கங்களில் 20 விழுக்காடு கூலி உயர்த்தி வழங்க வேண்டும், தையல் கடைகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும், நலவாரிய செயல்பாட்டை எளிமைப்படுத்த வேண்டும், ஆவணங்கள் சரியில்லை எனக் கூறி பணப்பயன் கோரும் மனுவை தள்ளுபடி செய்யக்கூடாது, 60 வயது முடிந்தவர்களுக்கு நிபந்தனையற்ற ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் பணப்பலன்களை உயர்த்தி வழங்க வேண்டும், நலவாரிய கமிட்டிகளை முறையாக அமைத்து அதை செயல்படுத்த வேண்டும், ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனங்களில் பணியாற்றும் தையல் கலைஞர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும், இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், வீடு சார்ந்த தையல் வேலை செய் பவர்களுக்கு வணிக முறை மின் கட்டணமாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும், தையல் கலைஞர்களுக்கு வங்கி மூலம் கடனும், வீடு இல்லாதவர்களுக்கு வீடும் வழங்க வேண்டும்,தையல் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி முதலே கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்:
மாநாட்டில் புதிய மாநிலத் தலைவராக ப.சுந்தரம், பொதுச் செயலாளராக எம்.அய்டா ஹெலன், பொருளாளராக இரா.மாலதி உள்ளிட்ட 17 நிர்வாகிகளும், 33 மாநிலக் குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப் பட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: