மேட்டுப்பாளையம்:
உதகை சாலை விரிவு!
உதகை, மேட்டுப்பாளையம் வரை சுமார் 54 கி.மீ தூர சாலையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் அமைந்துள்ளன. இந்தச் சாலையில் விபத்துகள் அடிக்கடி ஏற்படு
கின்றன. இந்நிலையில் ஊட்டி, மேட்டுப்பாளையம் வரை தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.67 கோடி மதிப்பில் தார் சாலை மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கியுள்ளன.

நாகர்கோவில்:
குமரியில் கடல் சீற்றம்!
தமிழகத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் கடும்
சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கட லோரத்தில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். கடல் அலைகள் சுமார் 30 அடி வரை வருவதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

திருச்சி:
சிலை மோசடி விசாரணை
பழனி முருகன் கோவில் சிலை முறைகேடு வழக்கில் முன்னாள் ஆணையர் தன பால் செவ்வாயன்று திருச்சியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசா
ரணைக்காக ஆஜர் செய்யப்பட்டார். இத னால் பழனி முருகன் சிலை முறைகேடு விவ
காரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

புதுச்சேரி:
சட்டப்பேரவை கூடுகிறது
மூன்று பா.ஜ.க நியமன சட்டமன்ற உறுப்பினர்களை பேரவைக்கு அனுமதித்து நிதி
மசோதாவை தாக்கல் செய்யலாம் என்ற நிபந்தனையுடன் கிரண்பேடி நிதி மசோதா
வுக்கு ஒப்புதல் அளித்திருந்தார். இதை யடுத்து, புதனன்று தொடங்க உள்ள சட்டப்
பேரவை கூட்டத்தில் பட்ஜெட் நிறைவேற்றப்பட உள்ளது. காலை 9.30 மணிக்கு பேரவை
கூட்டம் கூட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை:
கனிமொழி புகார்!
இந்து மதம் குறித்து கனிமொழி அவ தூறாக டுவிட்டரில் பதிவிட்டதுபோல சமூக
வலைதளங்களில் போட்டோஷாப் செய்யப்பட்ட படம் வைரலானது. இந்த நிலை
யில், தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் போட்டோஷாப் மூலம் போலி புகைப்படத்தைப் பதிபவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையில் கனிமொழி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்:
கூடுதல் ஆணையர் கைது
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட சோமஸ்கந்தர் சிலை செய்வதில் முறைகேடு நடைபெற்ற தாக ஏற்கெனவே 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்தநிலையில் கோயில் அர்ச்சகர் கொடுத்த புகாரின் பேரில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு:
விஞ்ஞானி பணி ஓய்வு
இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் கடந்த 36 வருடங்களாக பணியாற்றிவரும் தமிழக விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை கடந்த 2005 -ம் ஆண்டு முதல் பெங் களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இயக்குநராக உள்ளார். பல்வேறு செயற்கை கோள்களின் வெற்றிக்கு முக்கிய பங்காற் றிய இவர் செவ்வாயன்று ஓய்வுபெற்றார்.

இடுக்கி:
இடுக்கியில் அலர்ட்!
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இந்த அணையின் முழுக்கொள்ளவான 2,402 அடியில் தற்போது 2,395 அடி தண்ணீர் உள்ளது. மழை காரணமாக தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துவரும் நிலையில், மக்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் உதவியையும் கோரியுள்ளது கேரள அரசு.

மதுரை:
ஹெலிகாப்டர் சுற்றுலா
மதுரை உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. விரை வில் தமிழகத்தில் ஹெலி காப்டர் சுற்றுலா சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: