தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எனப்படும் டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா  “ஆதார் எண்ணைத் தருகிறேன், முடிந்தால் ஹேக் செய்யுங்கள் என பதிவிட்டிருந்தார்.  இந்த சவாலை ஏற்றுக்கொண்ட ஹேக்கர்கள் அடுத்த  சில மணி நேரத்திலேயே எலியட் ஆண்டர்சன் என்ற பெயர் கொண்ட டுவிட்டர் பக்கத்தில் இருந்து ஆர்.எஸ்.சர்மானிவின் ஆதார் தகவல்கள் வெளியாகின.

அதனை தொடர்ந்து சில எதிக்கல் ஹேக்கர்ஸ்கள் பலர் ஆர்.எஸ்.சர்மாவின் டிமேட் கணக்கின் எண், அதில் அவரது மூன்று வருட பேமெண்ட்  செய்ததற்கான கணக்கு வழக்குகளை எடுத்து காட்டினார்.  வலதுசாரி இணையதளங்களுக்கு எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தியது, ஆதார் கார்டு பயன்படுத்தி ஜூலை 2 ஆர்கானிக் பொருட்களை குறிப்பிட்ட நிறுவனம் மூலமாக விற்றது முதல் கொண்டு தகவல்களை வெளியிட்டனர்.

அதனை தொடர்ந்து தற்போது  ஆர்.எஸ். சர்மாவின் மகள் கவிதா சர்மாவிற்கு மற்றும் ஆர்.எஸ். சர்மாவின் யாகூ மற்றும் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியும் இணைத்து  மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் சமூக ஊடகங்களில் ஆர்.எஸ் சர்மா விடுத்த  சவால் நாட்டிற்கு பெரும் அவமானமாகிவிட்டது உன் அப்பாவின் பஞ்சாப் நேஷனல் வங்கி கணக்கும், மின்னஞ்சல் முகவரியும் ஹேக்கர்களின் கையில் இருப்பதால் வங்கி கணக்கை உடனடியாக  மூடிவிடு என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மெயிலுக்கு உடனடியாக ரெஸ்பாண்ட் செய்ய வேண்டுமென்றும், இல்லையென்றால் அவரது செல்போனில் ரிமோட் மால்வேர் ஒன்று பொருத்தப்பட்டு அவர் பேசுகிற அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படுமென மிரட்டியுள்ளனர். மேலும் மின்னஞ்சலை யாராலும் பார்க்க முடியாதவாறு என்கிரிப்ட் செய்யவும் அவருக்கு ஹேக்கர்ஸ் அறிவுரை கூறியுள்ளனர்.

அடுத்த 24 மணிநேரத்தில் மின்னஞ்சல் பதிலளிக்கவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும், காவல்துறைக்கு சென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஹேக்கர்ஸ்கள் கவிதா சர்மாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.