தீக்கதிர்

கைகளால் மலமள்ளுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…!

புதுதில்லி;
இந்தியாவில் 13 மாநிலங்களில் 13 ஆயிரத்து 657 பேர் கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் பாஜக உத்தரப்பிரதேசத்தில் மட்டும் அதிகபட்சமாக 11 ஆயிரத்து 247 பேரும், கர்நாடகத்தில் 738 பேரும், ராஜஸ்தானில் 338 பேரும், தமிழகத்தில் 363 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.