நான்ஜிங்:
சீனாவில் நடைபெற்று வரும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் இந்தியாவின் சாய்னா நேவால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
செவ்வாயன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் துருக்கியைச் சேர்ந்த அலியே டெமிர்பேக்கை எதிர்கொண்டார்.தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாய்னா 21-17,21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடிகள் படுமோசம்:
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா – ரெட்டி என்.சிக்கி ஜோடி,சீன தபேவின் கை ஹஸின் – ஹுங் சிக் ஜோடியை 19-21,21-17,21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் ராங்கி ரெட்டி – அஸ்வினி பொன்னப்பா ஜோடி ஜோடி ஜெர்மனியின் லாம்பியுஸ் – ஹெர்ட்டிரிச் ஜோடியை 10-21,21-17,21-18 வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த இரண்டு ஜோடிகள் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.மற்ற இந்திய ஜோடிகள் அடுத்தடுத்து வெளியேறிய வண்ணம் உள்ளன.

வெளியேறிய இந்திய ஜோடிகள்:
அர்ஜுன்                  –          ராமச்சந்திரன்       (ஆடவர் இரட்டையர்)
கோனா தருண்    –          சவுரப் சர்மா         (ஆடவர் இரட்டையர்)
ஜக்கம்புடி மேகனா –        பூர்விஷா            (மகளிர் இரட்டையர்)
ரோஹன் கபூர் –             குகூ கார்க்             (கலப்பு இரட்டையர்)
பிரணவ் ஜெர்ரி –    ரெட்டி என்.சிக்கி            (கலப்பு இரட்டையர்)
சவுரப் சர்மா –          அனோஷ்கா பரிக்          (கலப்பு இரட்டையர்)

Leave a Reply

You must be logged in to post a comment.