கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றியங்களில் புதியதாக உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் கீழ், கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் மாநகராட்சி எல்லைகளை மறுவரையறை செய்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றியங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றியங்களில் புதியதாக உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கோவை மாநகராட்சி வார்டு எண் 1 முதல் 9, 26-32, 42,43 வரை சண்முகம், வார்டு எண் 23-25, 81, 77 வரை நரசிம்மன், வார்டு எண் 33-39 வரை ராமசாமி, வார்டு எண் 23-25, 81,77 வரை குமரகுருபரன், வார்டு எண் 50-52, 54, 72 வரை காமராஜ், வார்டு எண் 57-64, 66 வரை மகாராஜா, வார்டு எண் 71, 73-75, 82, 94-100 வரை ரங்கராஜன், வார்டு எண் 76, 78-80 வரை பாலசுப்பிரமணியன், வார்டு எண் 83-86, 87-93 வரை விஜயராஜா, மேலும், மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் காரமடை பகுதிக்கு ஆறுச்சாமி, பொள்ளாச்சி நகராட்சிக்கு செல்வபாண்டியன், அன்னூர் மற்றும் சர்க்கார்சாமகுளம் சொல்வல்லன், கிணத்துக்கடவு சிவானந்தம், மதுக்கரை விஜயகுமார், பெரியநாயக்கன்பாளையம் கருப்பசாமி, சுல்தான்பேட்டை சிவராஜ், சூலூர் வேலுச்சாமி, தொண்டாமுத்தூர் சுப்புராஜ்,ஆகியோர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை மேற்கண்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கலாம்.

Leave A Reply

%d bloggers like this: