துபாய்:
அமீரகத்தில் ஆகஸ்ட் 1 முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா மற்றும் பொதுமன்னிப்பு அறிவிப்பையொட்டி 9 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) சட்ட விரோதமாக தங்கியிருப்போர், விசா காலம் முடிந்தும் புதுப்பிக்காமல் தங்கியிருப்போர், வீடு மற்றும் பணியிடங்களில் இருந்து சொல்லாமல் சென்றவர்கள், நாட்டிற்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்தவர்கள் என அனைவரும் தங்களுடைய நிலையை அமீரகத்திற்குள் இருந்தவாறே சட்டப்பூர்வமாக மாற்றிக்கொள்ளலாம்; அல்லது அபராதங்கள், தண்டனைகள் ஏதுமின்றி நாட்டை விட்டு முறையாக வெளியேறலாம்; மீண்டும் அமீரகத்திற்குள் சட்டப்பூர்வமாக வர எந்தத் தடையும் விதிக்கப்படவும் மாட்டாது போன்ற சலுகைகளுடன் 90 நாட்கள் அவகாசம் வழங்கி அமீரக அரசு பொதுமன்னிப்பை அறிவித்துள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம் ஆகஸ்ட் 1 முதல் ஆரம்பமாகிறது.
90 நாட்கள் பொதுமன்னிப்பு அவகாசம் முடிந்த பிறகு நாடு முழுவதும் அதிரடி தொடர் சோதனைகள் நடத்தப்படும். பிடிபடுவோர் மீது அபராதம் மற்றும் சிறைத்தண்டனைகள் விதிக்கப்படுவதுடன் நாட்டிற்குள் மீண்டும் நுழைய நிரந்தர தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமீரகத்திற்குள் எத்தகைய ஆவணங்களும் இன்றி நுழைந்தவர்களும் முறைப்படி உதவி மையங்கள் வழியாக வெளியேறலாம் என்றாலும் இவர்களுக்கு மட்டும் 2 வருட தடை விதிக்கப்படும்; தடைக்குப் பின் மீண்டும் முறைப்படி அமீரகத்திற்குள் வரலாம் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோதமாக தங்கியிருப்போர் விரும்பினால் தங்களுடைய சொந்த (சுய) ஸ்பான்சரின் கீழ் அல்லது வேலைவாய்ப்பளிக்கும் ஒரு ஸ்பான்சரின் கீழ் 6 மாத விசாவில் இருந்து கொண்டு அமீரகத்தில் வேலை தேடிக் கொள்ளலாம் எனவும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், போரால் பாதிக்கப்பட்ட சிரியா, ஏமன் போன்ற நாடுகளைச் சேர்ந்த குடும்பத்தினர்களுக்கு ஒரு வருட ரெஸிடென்ஸ் விசாவும் வழங்கப்படும்; இக்காலகட்டத்தில் அவர்களும் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு உதவ இந்திய தூதரகம் மற்றும் பொதுநல அமைப்புகள்:
இந்தியர்களுக்கு உதவ இந்திய தூதரகமும் இந்தியர் சார்ந்த பல்வேறு சமூக நல நிறுவனங்களும் தங்களுடைய தொடர்பு எண்களை அறிவித்து உதவ முன்வந்துள்ளன.

அபுதாபி இந்திய தூதரகம்: 050-8995583

இந்திய தூதரகத்தின் தொழிலாளர் நல மைய இலவச எண் : 80046342 (24 மணிநேரமும்)

இந்திய தூதரகத்தின் பொதுமன்னிப்பு விவகாரங்களுக்கான சிறப்பு மின்னஞ்சல் முகவரி: [email protected]

துபாய் இந்திய துணை தூதரகத்தின் 24 மணிநேர தொலைபேசி எண் : 056-5463903

துபாய் துணை இந்திய தூதரகத்தின் பொதுமன்னிப்பு விவகாரங்களுக்கான சிறப்பு மின்னஞ்சல் முகவரி: [email protected]

அமீரகத்தில் செயல்படும் இந்திய சமூக நல நிறுவனங்களின் விபரம் வருமாறு:
1. The Indian Social and Cultural Centre (ISC) reception: 02-6730066
2. The Kerala Social Centre help desk: 02-6314455
3. The Abu Dhabi Malayalee Samajam’s welfare wing will take care of all amnesty-related enquiries made to 050-7035538 and 02-5537600
4. The Indian Islamic Centre in Abu Dhabi (IIC): 02-6424488

Leave A Reply

%d bloggers like this: